20-06-2026
20-06-2026

தமிழகத்​தில் திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை பிளஸ் 2 தேர்வு முடிவு​கள் வெளியீடு

தமிழகத்​தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு​கள் வெளி​யீடு தள்​ளிப்​போக வாய்ப்​புள்​ள​தாக தகவல்​கள் வெளி​யான நிலையில், நாளை மே 8-ம் தேதி திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.தமிழக பள்​ளிக் கல்வி பாடத் திட்​டத்​தில் பிளஸ் 2 பொதுத்​தேர்வு கடந்த மார்ச் 2 முதல் 26-ம் தேதி வரை நடை​பெற்​றது. இத்​தேர்வை மாநிலம் முழு​வதும் சுமார் 8 லட்​சம் மாணவ, மாணவி​கள் எழு​தினர். இவர்​களின் விடைத்​தாள் மதிப்​பீட்​டுப் பணி​கள் ஏப். 6 முதல் 20-ம் தேதி வரை நடை​பெற்​றது.தொடர்ந்து தேர்வு முடிவு​களை வெளி​யிடு​வதற்​கான பணி​களை தேர்​வுத் துறை மேற்​கொண்டு வரு​கிறது. இதனால், பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு​கள் ஏற்​கெ​னவே அறி​வித்​த​படி மே 8-ல் வெளி​யாகும் என எதிர்​பார்க்​கப்​பட்​டது.இந்​நிலை​யில், தேர்வு முடிவு​கள் வெளி​யீடு சற்று தள்​ளிப்​போக வாய்ப்​புள்​ள​தாக தகவல்​கள் வெளியாகின. பிளஸ் 2 விடைத்​தாள் மதிப்​பீடு முடிக்​கப்​பட்​டு, மாணவர்​களின் மதிப்​பெண்​கள் இணை​யதளத்​தில் பதிவேற்​றப்​பட்டுள்ளன. எனினும், தற்​போது ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டுள்​ள​தால் தேர்வு முடிவு​களை வெளி​யிட அரசின் ஒப்​புதலைப் பெற வேண்​டும். இதனால், திட்​ட​மிட்​டபடி மே 8-ல் பிளஸ் 2 முடிவு​களை வெளி​யிட முடி​யாது என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின.இது பல்வேறு மேற்படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க ஆர்வமுடன் காத்திருந்த மாணவர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நாளை மே 8-ம் தேதி திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது

+