20-06-2026
20-06-2026

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை

சென்னை: தமிழகம், புதுச்​சேரி உள்​ளிட்ட 5 மாநில சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்கு எண்​ணிக்கை நாளை நடை​பெறுகிறது. தமிழகத்​தில் பாது​காப்​புக்கு 1 லட்​சம் போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டுள்​ளனர்.தமிழகம் உள்​ளிட்ட 5 மாநில சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான அறி​விப்பை தேர்​தல் ஆணை​யம் கடந்த மார்ச் 15-ம் தேதி வெளி​யிட்​டது. அதன்​படி, புதுச்​சேரி, கேரளா, அசாமில் கடந்த ஏப்​.9-ம் தேதி​யும், தமிழகத்​தில் கடந்த ஏப்​.23-ம் தேதி​யும் ஒரே கட்​ட​மாக வாக்​குப்​ப​திவு நடந்​தது. மேற்கு வங்​கத்​தில் ஏப்​.23, 29 ஆகிய தேதி​களி்ல் 2 கட்​ட​மாக நடை​பெற்​றது. அங்கு 2-ம் கட்ட தேர்​தலில் முறை​கேடு புகார்​கள் எழுந்​த​தால், 15 வாக்​குச்​சாவடிகளில் நேற்று மறு வாக்​குப்​ப​திவு நடத்​தப்​பட்​டதுஇதே​போல, கோவா, குஜ​ராத், கர்​நாட​கா, மகா​ராஷ்டி​ரா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய 6 மாநிலங்​களில் காலி​யாக உள்ள பேர​வைத் தொகு​தி​களுக்கு ஏப்​.9, 23 ஆகிய தேதி​களில் இடைத் தேர்​தல் நடத்தப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தைப் பொருத்​தவரை, மொத்​தம் 4,023 வேட்​பாளர்​கள் போட்​டி​யிட்​டுள்​ளனர். 5.73 கோடி வாக்காளர்களில் 4.88 கோடி பேர் வாக்களித்தனர். இதன்மூலம் 85.10 சதவீத வாக்குப்பதிவு நடந்து, சாதனை படைக்கப்பட்டுள்ளது.கடந்த 23-ம் தேதி மாலை 6 மணிக்கு வாக்​குப்​ப​திவு முடிந்​ததும், மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் அனைத்​தும் சீலிடப்​பட்​டு, தமிழகம் முழு​வதும் வாக்கு எண்​ணிக்கை நடை​பெற உள்ள 62 மையங்​களில் பாது​காப்பு அறை​களில் (‘ஸ்​டி​ராங் ரூம்’) வைக்​கப்​பட்​டுள்​ளன. இங்கு 4 அடுக்கு போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது.இந்​நிலை​யில், 5 மாநில சட்​டப்​பேர​வைத் தேர்​தல் மற்​றும் இடைத் தேர்​தல் வாக்கு எண்​ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்​கு​கிறது. இதற்​கான பாது​காப்பு ஏற்​பாடு​கள் தொடர்​பாக 5 மாநில தலை​மைத் தேர்​தல் அதி​காரி​களு​டன் தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்கு​மார் நேற்று இணைய வழி​யில் ஆலோ​சனை நடத்​தி​னார்.தமிழகத்​தில் செய்​யப்​பட்​டுள்ள பாது​காப்பு ஏற்​பாடு​கள் குறித்து மாநில தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் விளக்​கி​னார். ‘‘தமிழகத்​தில் 62 மையங்​களில் 65 கம்​பெனி துணை ராணுவப் படை​யினர் பாது​காப்பு பணி​யில் ஈடுபட உள்​ளனர். 18 ஆயிரம் போலீ​ஸாரும் பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்பட உள்​ளனர். மாநிலம் முழு​வதும் சட்​டம் - ஒழுங்​கைப் பாது​காக்க சுமார் 1 லட்​சம் போலீ​ஸார் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். தொகு​திக்கு ஒரு வாக்கு எண்​ணிக்கை பார்​வை​யாளர் என 234 பார்​வை​யாளர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்’’ என்று அவர் தெரி​வித்​தார்.

+